ஐரோப்பிய நாடுகளுக்கு ஏழு நாட்களுக்குள் 78 தொன் மீன் ஏற்றுமதி

meen ஐரோப்பிய ஒன்றியத்தின் மீன் ஏற்றுமதிக்கான தடை நீக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த ஏழு நாட்களுக்குள் 78 தொன் மீன்கள் அனுப்பப்பட்டுள்ளதாக நீர்வள மற்றும் மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடுகளுக்கு மீன் ஏற்றுமதி செய்வது தொடர்பான கலந்துரையாடலின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

 

கடந்த ஒரு வார காலத்தில் 13 மீன் ஏற்றுமதி சங்கங்களின் ஊடாக 96 தடவைகள் மீன் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இதன்மூலமே 78 தொன் மீன்கள் அனுப்பப்பட்டுள்ளன.

 

இதில் இறால் மற்றும் துனா மீன் வகைகள் போன்றவை அடங்கும்.

 

இதனைதொடர்ந்து பல மீன் ஏற்றுமதி சங்கங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடுகளுக்கு மீன் ஏற்றுமதி செய்ய முன்வைத்துள்ளன.

 

அதற்கமைய மீன்களின் தரத்தை பரிசோதித்து சுகாதார சான்றிதழை (Health Certificate Orders) பெற்றுக்கொண்டு மீன் ஏற்றுமதியை மேற்கொள்ளவும் இச்சங்கங்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

 

இலங்கை மீன் வகைகள் சிறந்த தரத்துடன் காணப்படுவதால் ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடுகளில் மட்டுமின்றி, ஆசிய வலய நாடுகளிலும், ஐக்கிய அமெரிக்கா போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளிலும் தற்போது நல்ல கேள்வி இருக்கின்றது.

 

கடந்த காலங்களில் ஐரோப்பிய ஒன்றியத்தின் மீன்ஏற்றுமதி தடை காணப்பட்டதால் மீன் ஏற்றுமதியில் 1600 கோடி ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது அந்த தடை நீக்கப்பட்டமையானது இலங்கை அரசாங்கத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply