சோம் போர் 100 ஆண்டுகள்: ஐரோப்பா முழுவதும் அஞ்சலி நிகழ்ச்சிகள்
முதலாவது உலகப் போரின் மிக மோசமான மோதலாகக் கருதப்படும் சோம் போரின் நூற்றாண்டைக் குறிக்கும் வகையில், ஐரோப்பா முழுவதும் நினைவஞ்சலி நிகழ்ச்சிககள் நடைபெறுகின்றன.வடக்கு பிரான்ஸில் உள்ள தீப்யல் நினைவு மண்டபத்தில், ஐரோப்பிய மற்றும் பொதுநலவாய நாடுகளின் படைவீரர்கள், வியாழக்கிழமை இரவு அஞ்சலி செலுத்தினார்கள்.ஜெர்மனிக்கு எதிரான தாக்குதல் துவங்கிய நேரத்தைக் குறிக்கும் வகையில், பிரிட்டன் நாடு முழுவதும் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்த உள்ளது.
லண்டனில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில், பிரிட்டிஷ் ராணி எலிசபெத், பிரதமர் டேவிட் கேமரன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பங்கேற்று நினைவஞ்சலி செலுத்தினார்கள்.கடந்த 1916-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் படைகள் ஜெர்மன் படைகளுக்கு எதிராக, சோம் நதிக்கு அருகே போரைத் துவங்கின. பிரிட்டன் படைகள் முதல் நாளிலேயே
பெரும் இழப்பைச் சந்தித்தன. ஒரே நாளில் 19,240 பிரிட்டன் வீரர்கள் கொல்லப்பட்டார்கள். பிரிட்டன் ராணுவ வரலாற்றில் மிக மோசமான நாளாக அது பார்க்கப்படுகிறது.
ஐந்து மாதங்கள் நடைபெற்ற அந்தப் போரில், 4 லட்சத்து 20 ஆயிரம் பிரிட்டிஷ் படையினரும், 2 லட்சம் பிரான்ஸ் படையினரும், 4 லட்சத்து 65 ஆயிரம் ஜெர்மன் படையினரும் கொல்லப்பட்டார்கள்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply