இவ்வருட இறுதிக்குள் 20,000 பேருக்கு இரட்டை பிரஜாவுரிமை

dual_citizenship_01072016_kaa_cmyஇவ்வருட இறுதிக்குள் 20 ஆயிரம் பேருக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்க உள்நாட்டலுவல்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது. இதனடிப்படையில், 1700 பேருக்கு எதிர்வரும் 11 ஆம் திகதி இரட்டை பிரஜாவுரிமை வழங்கப்படுமென குடிவரவு குடியகல்வு திணைக்களப் பேச்சாளர் தெரிவித்தார். இந்நிகழ்வு உள்விவகார அமைச்சர் எஸ். பி. நாவின்ன தலைமையில் பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடத்த ஏற்பாடாகியுள்ளது.

 

2015 ஜனவரி 08 ஆம் திகதி முதல் இதுவரையில் சுமார் 10 ஆயிரம் பேருக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்கப்பட்டுள்ளன.

 

கடந்த அரசாங்கத்தில் போலல்லாமல் தற்போது மிகுந்த நேர்மையுடனும் விரைவாகவும் இரட்டை பிரஜாவுரிமை வழங்கப்படுவதாகவும் அவ்வதிகாரி தெரிவித்தார்.

 

வெளிநாடுகளில் பிரஜாவுரிமை பெற்ற இலங்கையர்கள் இயல்பாகவே இலங்கையின் பிரஜாவுரிமையை இழந்து விடுகின்றனர். இவர்கள் மீண்டும் விண்ணப்பிப்பதன் மூலம் இலங்கைக்கான பிரஜாவுரிமையினை பெற முடியுமென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

 

நாட்டை அபிவிருத்தி செய்யும் அதேநேரம் மக்கள் வளத்தை வலுப்பெறச் செய்வது அரசாங்கத்தின் முக்கிய குறிக்கோளாகும்.

 

கடந்த காலங்களில் இடம்பெற்ற யுத்த சூழ்நிலை காரணமாக நாட்டில் கல்வித் தகைமை மற்றும் தொழில்துறையில் தேர்ச்சிபெற்ற பலர் நாட்டை விட்டு சென்றுள்ளனர்.

 

இவர்களது அறிவு, அனுபவம் மற்றும் பங்களிப்பு நாட்டிற்கு இன்றியமையாதது என்பதன் காரணமாகவே இந்த அரசாங்கத்தின் கீழ் இரட்டை பிரஜாவுரிமை வழங்கலுக்கு கூடிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பதாக அவ்வதிகாரி கூறினார்.

 

இரட்டை பிரஜாவுரிமைக்கோரி மேலும் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு கிடைக்கப்பெற்றிருப்பதாகவும் அவ்வதிகாரி குறிப்பிட்டார்.

 

விண்ணப்பதாரிகள் இலங்கையில் வாழ்ந்திருந்தால் அக்காலப் பகுதியில் அவர்கள் எவ்வித குற்றச் செயல்களிலும் ஈடுபடாதவர்களாக இருக்க வேண்டுமென்பதில் குடிவரவு குடியகல்வு திணைக்களம் அக்கறை கொண்டுள்ளது. இதற்கமைய விண்ணப்பங்கள் பொலிஸ் திணைக்களத்தின் உதவியுடன் செயன்முறைக்குட்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply