அரசுக்குள் நெருக்கடி; மத்திய வங்கி ஆளுநர் நியமனத்தில் இழுபறி : மஹிந்த ராஜபக்ஷ

MAHINDAஅரசாங்கத்திற்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாகவே இன்னும் மத்திய வங்கி ஆளுநர் ஒருவரை நியமிக்க முடியாதுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றஞ் சுமத்தியுள்ளார். பெந்தர கடற்கரையில் உடற்பயிற்சி மேற்கொண்ட அவர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார். மேலும் கருத்துத் தெரிவித்த அவர் நல்லாட்சி அரசாங்கத்திற்குள் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஒரு போதும் இல்லாதவாறான ஆட்சியே இன்று காணப்படுகிறது. இந்த நல்லாட்சியை மக்கள் பாராட்டுகின்றனர்.

 

தாம் என்ன செய்கிறோம் என்று தெரியாமலே ஆட்சியில் உள்ளவர்கள் நடந்து கொள்கிறார்கள். ஆளுநர் விடயத்தில் அரசாங்கத்திற்குள் இருக்கும் குழப்ப நிலை தெளிவாகிறது.

 

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply