வங்காளதேசத்தில் துப்பாக்கி சூடு: வெளிநாட்டினர் பிணையக்கைதிகளாக பிடிப்பு
வங்காளதேச தலைநகர் டாக்காவில் தூதரக அதிகாரிகள் வசிக்கும் பகுதியில் உள்ள உணவகத்தில் தீவிரவாதிகள் துப்பாகி சூடு நடத்தி வெளிநாடினரை பிணையகைதிகளாக பிடித்து வைத்துள்ளனர். ஆர்ட்டிசன் பேக்கரி கபே என்ற அந்த உணவகம் வெளிநாட்டவர்கள் மற்றும் நடுத்தரவர்க்க மக்கள் அதிகம் வரும் இடம். நேற்று இந்த உணவகத்திற்குள் துப்பாக்கி ஏந்திய பல தீவிரவாதிகள் நுழைந்து தாக்குதல் நடத்தி சுமார் 20 வெளிநாட்டினரை பிணையகைதிகளாக பிடித்துவைத்துள்ளனர்.
பிணையகைதிகளாக பிடிப்பபட்டவர்களில் பலர் இத்தாலியர்கள் என்று கூறப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் உரிமை கோரியுள்ளனர். மேலும் இந்த தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டதாகவும் ஐ.எஸ். அமைப்பு கூறியுள்ளது.
ஆனால் வங்காளதேச அரசு வெளியிட்டுள்ள தகவலில் இரண்டு போலிசார் மட்டுமே உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது.
தற்போது அந்த பகுதி முழுவது பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்படுட்டுள்ளது. பிணையக்கைதிகளை மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply