டாக்கா உணவு விடுதியில் தாக்குதல் நடத்திய 6 ஐ.எஸ். தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்: 18 பேர் மீட்பு

dakkaவங்காளதேசத்தில் வெளிநாட்டு தூதரகங்கள் அதிகம் நிறைந்துள்ள முக்கிய இடமான குல்ஷன் பகுதியில் உள்ள ஹோலி ஆர்டிசன் பேக்கரி உணவகத்தில் நேற்று பின்னிரவு பயங்கர ஆயுதங்களுடன் மர்ம நபர்கள் உள்ளே நுழைந்தனர். வெளிநாட்டினர் அதிகம் வந்துசெல்லும் இந்த உணவு விடுதிக்குள் 20-க்கும் மேற்பட்டோரை பிணையக்கைதிகளாக பிடித்து வைத்திருந்தனர். இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்பதாக ஐ.எஸ். தீவிரவாதிகள் தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்தை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகள் மீது துப்பாக்கிச்சண்டையில் ஈடுபட்டனர். இந்த சண்டையில் இரண்டு காவலர்கள் பேர் பலியாகினர். சுமார் 40 பேர் காயம் அடைந்தனர் என முன்னர் தகவல் வெளியானது.

உணவகத்தின் உள்ள இத்தாலி நாட்டை சேர்ந்த 8 பேர் உள்பட சில வெளிநாட்டினரும் பிணைய கைதிகளாக சிக்கி இருந்ததால் ‘கமாண்டோ’ அதிரடிப்படை மூலமாக அவர்களை மீட்கும் நடவடிக்கை இன்று காலை 7.40 மணியளவில் தொடங்கியது.

அந்த ஓட்டலுக்குள் அதிரடியாக நுழைந்த கமாண்டோ படையினர் உள்ளே இருந்த ஆறு தீவிரவாதிகளையும் சுட்டுக் கொன்றனர். இந்த தாக்குதலின்போது ஓட்டலின் உள்ளே இருந்து ஒரு ஜப்பானியர் உள்பட இருவர் வெளியே தப்பி ஓடி வந்தனர்.

தீவிரவாதிரகள் பிடித்து வைத்திருந்த 18 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். மீட்கப்பட்டவர்களில் இந்தியா, இலங்கை, சீனா ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் உள்ளதாகவும், அவர்களில் சிலர் காயம் அடைந்திருப்பதாகவும் டாக்காவில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுமார் ஆயிரம் ரவுண்டு துப்பாக்கிச் சூட்டுக்கு பின்னர் ஆறு தீவிரவாதிகளும் கொல்லப்பட்டதாகவும், மீட்பு நடவடிக்கை முடிவுக்கு வந்துள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன் மூலம் கடந்த 12 மணி நேரமாக தீவிரவாதிகள் நடத்திய முற்றுகை முடிவுக்கு வந்ததாக தெரியவந்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply