வங்காளதேச தீவிரவாத தாக்குதலில் 7 ஜப்பானியர்கள், 9 இத்தாலியர்கள் பலி

dakkaவங்காளதேசத்தில் உள்ள விடுதியில் பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலில் ஜப்பான் நாட்டை சேர்ந்த 7 பேர் உயிரிழந்துள்ளனர். ஜப்பான் அமைச்சரவையின் தலைமை செயலாளர் யோஷிஹைட் சுகா இந்த தகவலை உறுதி செய்துள்ளார். 

 

மேலும் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் 9 பேர் இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர்கள். இத்தாலி நாட்டைச் சேர்ந்த வெளியுறவுத் துறை மந்திரி பவுலோ கெண்டிலோனி இதனை தெரிவித்துள்ளார்.

 

தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த மாணவி ஒருவர் பலியாகி இருப்பது தெரியவந்து இருக்கிறது. அவருடைய பெயர் தருஷி ஜெயின்(வயது 19). இதனை வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் டுவிட்டர் மூலம் உறுதி செய்துள்ளார்.

 

கொல்லப்பட்டவர்களில் 11 ஆண்களும், 9 பெண்களும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply