ஐ.எஸ். ஆதரவாளர்கள் 11 பேர் கைது எதிரொலி ஏழுமலையான் கோவிலில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு
ஐதராபாத்தில் ஐ.எஸ். ஆதரவாளர்கள் 11 பேர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ஏழுமலையான் கோவிலில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.ஐ.எஸ். ஆதரவாளர்கள் 11 பேர் கைது. தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாசவேலைகளுக்கு முயற்சி செய்த ஐ.எஸ். ஆதரவாளர்கள் 11 பேரை தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பயங்கர ஆயுதங்கள் மற்றும் ஏராளமான வெடிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.இதனையடுத்து ஆந்திர மாநிலத்தில் உள்ள புனித நகரங்களான திருப்பதி, திருமலை மற்றும் ஸ்ரீகாளஹஸ்தியில் போலீசாரின் கண்காணிப்புக்கு உத்தரவிடப்பட்டது.கோவில் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு.
அதைத் தொடர்ந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். திருப்பதியில் இருந்து திருமலை, திருமலையில் இருந்து திருப்பதி வரும் நடைப்பாதை, நான்கு மாடவீதி, தங்கும் விடுதி, பத்மாவதி விருந்தினர் மாளிகை, வி.ஐ.பி.க்கள் தங்கும் விடுதி, கல்யாணகட்டா மற்றும் பல்வேறு பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.மேலும் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் படையினர் திருப்பதி ஏழுமலையான் கோவில் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply