இரட்டை குண்டு வெடிப்பில் 126 பேர் பலி – ஈராக்கில் 3 நாள் துக்கம் அறிவிப்பு
இரட்டை குண்டு வெடிப்பில், 126 பேர் பலியானதை தொடர்ந்து ஈராக்கில், 3 நாள் துக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது,ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆதிக்கம் உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவில் காராடா மாவட்டத்தின் மத்திய பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் உணவகம் அருகே வெடிகுண்டுகள் நிரப்பிய கார் வெடித்து சிதறியது.இந்த தாக்குதல் நடந்த சிறிது நேரத்தில் பாக்தாத் நகருக்கு வடக்கில் ஷியா பிரிவினர் அதிகம் வாழும் பகுதியில் பலத்த சத்தத்துடன் குண்டு வெடித்தது. இந்த இரட்டை குண்டுவெடிப்பு சம்பவங்களில் 126 பேர் பலியாகினர். 150 பேர் காயம் அடைந்தனர்.
இத்தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் பொறுப்பு ஏற்றுள்ளனர். மேலும் இவை தற்கொலை தாக்குதல் என அறிவித்துள்ளனர்.
காராடா மாவட்டத்தில் குண்டுவெடிப்பு நடந்த இடத்தை பார்வையிட ஈராக் பிரதமர் ஹைதர் அல் அபாதி வந்தார். அப்போது கடும் ஆத்திரத்தில் இருந்த மக்கள் அவரது பாதுகாப்பு வாகனங்கள் மீது கற்களையும், செங்கற்களையும் வீசி தாக்குதல் நடத்தினார்கள்.
ஈராக்கில் நடந்தமிகப் பெரிய இந்த துயர சம்பவத்துக்கு அந்நாட்டு அரசு 3 நாள் துக்கம் அறிவித்துள்ளது. குண்டு வெடிப்பு நடந்த இடத்தை பார்வையிட்டு பிரதமர் திரும்பி சென்ற சிறிது நேரத்தில் இந்த தகவல் அறிவிக்கப்பட்டது.
மேலும், பாக்தாத், மற்றும் மாகாண எல்லை நுழைவு வாயில்களில் வாகனசோதனையை தீவிரப்படுத்தவும் பிரதமர் அபாதி உத்தரவிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply