ஜோர்ஜ் மாஸ்டரை விடுவிக்க உத்தரவு
விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் மொழி பெயர்ப்பாளரான ஜோர்ஜ் மாஸ்டரை அவருக்கு எதிரான வழக்கு விசாரணையில் இருந்தும் விடுவிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவினை கொழும்பு மேலதிக நீதவான் கிஹான் பிலப்பிட்டிய நேற்று பிறப்பித்துள்ளார். தலைமை சட்டத்தரணியின் அறிவுறுத்தலுக்கமைய இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மேலதிக நீதவான் தெரிவித்துள்ளார்.
இதேவேளை விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடக செயலாளரான தயா மாஸ்டரின் வழக்குதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் தலைமை சட்டத்தரணியின் ஆலோசனைகள் கிடைக்காமையினால் இந்த வழக்கு டிசம்பர் மாதம் 5ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply