துருக்கியில் இராணுவ அதிகாரிகள் குடும்பத்தினருடன் சென்ற ஹெலிகாப்டர் விபத்து: 7 பேர் உயிரிழப்பு
துருக்கி நாட்டின் வடகிழக்கு கிரெசன் மாகாணத்தில் இராணுவ ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகி உள்ளது. சிகோர்ஸ்கி என்ற அந்த ஹெலிகாப்டர் மோசமான வானிலை காரமாண மலைப் பகுதியில் மோதி கீழே விழுந்துள்ளதாக கூறப்படுகிறது.ஹெலிகாப்டரில் பிரிகேடியர் ஜெனரல் மற்றும் இரு நாட்டு இராணுவ தளபதிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் என மொத்தம் 15 பேர் இருந்தனர். அதில் ஏழு பேர் குழந்தைகள். கருங்கடல் பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இரமலான் பண்டிகை கொண்டாட்டத்திற்காக இராணுவ வீரர்கள் குடும்பத்தினருடன் ஹெலிகாப்டரில் சென்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர். இராணுவ தலைமை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்ட துருக்கி துணை பிரதமர் நுரெட்டின் கனிக்லி விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply