பிரதமர் நரேந்திர மோடி நான்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு பயணம்

modiபிரதமர் நரேந்திர மோடி நான்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு இன்று (வியாழக்கிழமை) முதல் 11ஆம் தேதி வரை பயணம் மேற்கொள்கிறார்.ஜூலை 7ஆம் தேதி மொசாம்பிக் அதிபர் பிலிப்பி நியூசியுடன் மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்திரா காந்திக்கு பின்னர் 30 ஆண்டுகள் கழித்து மொசாம்பிக் செல்லும் இந்திய பிரதமர் மோடி. இந்த நாட்டில் சுமார் 20 ஆயிரம் இந்தியர்கள் வசிக்கின்றனர்.

ஜூலை 8ஆம் தேதி தென்னாப்பிரிக்கா செல்கிறார். ஜோகனஸ்பர்க் மற்றும் பிரெட்டோரியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, அந்நாட்டு அதிபர் ஜுமாவுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதையடுத்து இந்தியா தென்னாப்பிரிக்கா வர்த்தகர்களிடம் இருநாட்டுத் தலைவர்களும் உரையாற்றுகின்றனர். தென்னாப்பிரிக்காவில் சுமார் 12 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர்.

ஜூலை 9ஆம் தேதி டர்பன் செல்லும் மோடி, மகாத்மா காந்தி ரயிலில் இருந்து இனவெறியால் வெளியேற்றப்பட்ட இடத்தை பார்வையிடுகிறார். அன்று மாலை தான்சானியா செல்கிறார். அந்நாட்டு அதிபர் ஜான் போம்பே ஜோசப்புடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

ஜூலை 10ஆம் தேதி தனது பயணத்தின் இறுதி கட்டமாக கென்யா செல்ல உள்ள மோடி, ஜூலை 11ஆம் தி நைரோவியல் உள்ள ஐ.நா. கட்டடத்தை பார்வையிடுகிறார். கென்யா அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதன்பின்னர் மோடி இந்தியா திரும்புகிறார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply