மத்திய வங்கி ஆளுனர்க்கு கோப் குழுவிற்கு வருமாறு அழைப்பு

bankமத்திய வங்கியின் புதிய ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமிக்கு இன்று கோப் குழுவிற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.மத்தியவங்கியின் முறிகள் தொடர்பில் கணக்காய்வாளர் நாயகத்தால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்காக மத்திய வங்கியின் ஆளுநர் அழைக்கப்பட்டுள்ளதாக கோப் குழுவின் தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

அத்துடன், நிதிக்குழு மற்றும் நிதியமைச்சின் செயலாளரும் கோப் குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்கவும் இன்று நடைபெறவுள்ள கோப் குழுவின் கலந்துரையாடலில் கலந்து கொள்ளவுள்ளார்.

மேலும் நேற்று முன்தினம் தமது அறிக்கையினை சமர்ப்பித்த கணக்காய்வாளர் நாயகம், அறிக்கை தொடர்பில் தௌிவுப்படுத்தியதாக கோப் குழுவின் தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply