பாக்தாத்தில் மசூதி அருகே தீவிரவாதிகள் தாக்குதல் : 35 பேர் பலி
பாக்தாத் நகரில் இருந்து வடக்கே சுமார் 70 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பலாட் என்ற இடத்தில் ஷியா பிரிவினரின் வணக்கஸ்தலமான சய்யித் முஹம்மது தர்கா மற்றும் அதையொட்டிய மசூதியும் உள்ளது. நேற்றிரவு இந்த மசூதிமீது தீவிரவாதிகள் ‘மோர்ட்டார்’ ரக குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.இதனால், அங்கிருந்தவர்கள் பீதியால் மார்க்கெட் வழியாக ஓட்டம்பிடித்தபோது அந்த கூட்டத்துக்குள் புகுந்த இரு தற்கொலைப்படையினர் தங்களது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்தனர். இந்த தாக்குதலில் 35 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகினர்.
மேலும் ஒரு தற்கொலைப்படை தீவிரவாதியை சுட்டுக்கொன்ற பாதுகாப்பு படையினர், அவனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை செயலிழக்க வைத்தனர். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த ஐம்பதுக்கும் அதிகமானோர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
பாக்தாத் நகரில் சமீபத்தில் தீவிரவாதிகள் நடத்திய மனிதகுண்டு தாக்குதலுக்கு சுமார் 300 பேர் பலியானது நினைவிருக்கலாம்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply