பயங்கரவாதம், உலகத்துக்கே மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது: நரேந்திர மோடி

modiபிரதமர் நரேந்திர மோடி 4 ஆப்பிரிக்க நாடுகளுக்கு 5 நாட்கள் சுற்றுப்பயணமாக சென்றுள்ளார். முதல்கட்டமாக, அவர் மொசாம்பிக் நாட்டுக்கு நேற்று சென்றார். அதிபர் மாளிகைக்கு சென்ற பிரதமர் மோடியை அதிபர் பிலிப்பி ஜசின்டோ நியுசி வரவேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இருதரப்பு உறவை வலுப்படுத்துவது என்றும், மொசாம்பிக் பாதுகாப்பு படைகளுக்கு இந்தியா பயிற்சி அளித்து பலப்படுத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

அதையடுத்து, இரு தலைவர்களின் முன்னிலையில், இரு நாடுகளிடையே 3 ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. பின்னர், பிரதமர் மோடியும், மொசாம்பிக் அதிபரும் இணைந்து நிருபர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர்.
மோடி கூறியதாவது, மொசாம்பிக், ஆப்பிரிக்காவின் நுழைவாயில் ஆகும். ஆப்பிரிக்க கண்டத்தில் இந்தியா செய்துள்ள முதலீட்டில் நான்கில் ஒரு பகுதியை மொசாம்பிக்கில்தான் செய்துள்ளது. 34 ஆண்டுகளுக்கு பிறகு, இங்கு வந்துள்ள முதலாவது இந்திய பிரதமரும் நான்தான்.

பயங்கரவாதம், உலகத்துக்கே மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. பயங்கரவாத செயல், போதை மருந்து கடத்தல் உள்ளிட்ட இதர குற்றங்களுடன் பின்னிப் பிணைந்துள்ளது. எனவே, போதை மருந்து கடத்தலை கட்டுப்படுத்த மொசாம்பிக்குடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளோம்.

மொசாம்பிக்கில் இருந்து பருப்புவகைகளை கொள்முதல் செய்ய நீண்டகால ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளோம். இதன்மூலம், இந்தியாவின் பருப்பு தேவை பூர்த்தி ஆவதுடன், மொசாம்பிக் விவசாயிகளின் வருமானமும் பெருகும்.

இந்தியா, ஒரு நம்பிக்கையான தோழன், நம்பகமான கூட்டாளி. அந்த அடிப்படையில், எய்ட்சுக்கான மருந்துகள் உள்பட அத்தியாவசிய மருந்துகளை மொசாம்பிக்குக்கு நன்கொடையாக அளிப்போம்.

இந்தியாவும், மொசாம்பிக்கும் இந்திய பெருங்கடலால் பிணைக்கப்பட்டுள்ளன. எனவே, கடல் பகுதியில் அதிகரித்து வரும் சவால்களை எதிர்கொள்ள இரு நாடுகளும் ஒத்துழைப்பை அதிகரிக்கும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply