இன்று கொழும்பில் முஸ்லிம்கள் கடையடைப்பு

முஸ்லிம்கள் தொடர்பில் தவறான கருத்துகளையும் அவர்கள் மீது வீண் பழிகளையும் சுமத்தி வரும் இலங்கை அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் செயற்பாடுகள் குறித்து அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்காது மௌனியாக இருப்பதைக் கண்டித்து இன்று கொழும்பிலும் அதன் அண்மித்த பிரதேசங்களிலும் வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டன.

கொழும்பு புறக்கோட்டைப் பகுதியில் முஸ்லிம்களின் சகல வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டிருந்தன.

தமது கண்டனத்தை அரசுக்குத் தெரிவிக்கும் வகையில் முஸ்லிம்கள் கொழும்பு மருதானை ஜும்மா பள்ளிவாசலுக்கு முன்பாக ஜும்மா தொழுகையின் பின்னர் பாரிய ஆர்ப்பாட்டமொன்றிலும் ஈடுபட்டனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக் கணக்கானோர் கலந்து கொண்டு சுலோகங்களை எழுப்பினர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply