ஸ்பெயின் ஜல்லிக்கட்டில் காளை முட்டி வீரர் பலி

spainஸ்பெயினில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளை முட்டி வீரர் பலியானார். மேலும் 12 பேர் படுகாயம் அடைந்தனர்.ஸ்பெயின் நாட்டில் ‘புல் பைட்’ என்றழைக்கப்படும் ஜல்லிக்கட்டு புகழ்பெற்ற தாகும். அங்கு காளையை அடக்கும் வீரர் அதை ஈட்டியால் குத்தி கொல்வார். அது பெரிய வீரமாக கருதப்படும்.தெருயல் நகரில் பிரமாண்டமாக நடத்தப்படும் இப்போட்டி டி.வி.யில் ஒளிபரப்பப்படும். சமீபத்தில் வேலன்சியா அருகேயுள்ள பெட்ரீகுயர் என்ற கிராமத்தில் காளையை அடக்கும் ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது.

அதில் பிரபல மாடு பிடி வீரர் விக்டர் பாரியோ (29) கலந்து கொண்டார். பாய்ந்து வந்து காளையை அவர் எதிர் கொண்ட போது எதிர்பாராத விதமாக அது அவரது மார்பில் குத்தி சிறிது தூரம் இழுத்துச் சென்று தூக்கி வீசியது.

இதனால் படுகாயம் அடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது பார்வையாளர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

மேலும், காளையை பிடிக்க முயன்ற 12 பேர் படுகாயம் அடைந்தனர். 2 பேர் கொம்பு காயத்தால் பாதிக்கப்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறுகின்றனர்.

இதற்கிடையே மாடுபிடி வீரர் விக்டர் பாரியோ மறைவுக்கு ஸ்பெயின் பிரதமர் மரியானோ டுவிட்டரில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply