சிரியாவில் ரஷிய ராணுவ ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்திய ஐ.எஸ். தீவிரவாதிகள்: 2 விமானிகள் பலி
சிரியாவில் ரஷிய ராணுவ ஹெலிகாப்டரை ஐ.எஸ். தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தியதில் 2 விமானிகள் பலியாகினர்.சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்காவும், அதன் நட்பு நாடுகளும் போரிட்டு வருகின்றன. இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் ரஷியாவும் தீவிரவாதிகளுக்கு எதிரான குண்டுவீச்சு தாக்குதலில் இறங்கியது.ரஷியாவின் போர் விமானங்களும், ஹெலிகாப்டர்களும் தீவிரவாதிகளுக்கு எதிரான குண்டு வீச்சுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் நேற்று ஹோம்ஸ் நகரம் அருகே ரஷிய ராணுவ ஹெலிகாப்டரை ஐ.எஸ். தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தினர். இத்தாக்குதலில் அதில் பயணம் செய்த 2 விமானிகளும் உயிரிழந்தனர்.
ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்த பழங்கால சிறப்புமிக்க பல்மைரா நகரம் ரஷியா உதவியுடன் மீண்டும் கைப்பற்றப்பட்டது. ஆனால் கிழக்கு பகுதி இன்னும் மீட்கப்படாமல் உள்ளது. எனவே அங்கு தீவிரவாதிகளுக்கு எதிராக குண்டு வீசப்படுகிறது.
எனவே குண்டுவீச்சில் ஈடுபட்டுள்ள விமானங்களுக்கு தேவையான ஆயுதங்களை ஏற்றிக்கொண்டு ரஷியாவின் ‘எம்.ஐ.25’ ரக ஹெலிகாப்டர் புறப்பட்டு சென்றது. அதை ஐ.எஸ். தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தியதாக சிரியா அரசு தெரிவித்துள்ளது.
ரஷியா, ரியாவின் நட்புநாடு. அதிபர் பஷர்அல் ஆசாத்துக்கு ஆதரவு அளித்து வருகிறது. எனவே ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு பதிலாக ஆசாத்துக்கு எதிராக போராடும் கிளர்ச்சியாளர்கள் மீது ரஷியா குண்டு வீசுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டி வருவதை ரஷியா கண்டுகொள்ளவில்லை.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply