2 கருப்பர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தால் அமெரிக்காவில் போராட்டம் பரவுகிறது

USAஅமெரிக்காவில் ஆப்பிரிக்க அமெரிக்கரான ஒபாமா ஜனாதிபதியாக இருந்தாலும், அங்கு அந்த இனத்தை சேர்ந்தவர்கள் தொடர்ந்து போலீசாரின் துப்பாக்கிச்சூடுகளுக்கு பலியாகி வருகின்றனர். இது கருப்பர் இன மக்களிடையே பெரும் வேதனையை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 5-ந் தேதி லூசியானா மாகாணத்தில் பேட்டன்ரூஜ் நகரில் ஆல்டன் ஸ்டெர்லிங் என்ற கருப்பரும், 6-ந் தேதி மின்னசோட்டா மாகாணத்தில் செயிண்ட் பால் என்ற இடத்தில் பிலாந்தோ காஸ்டைல் என்ற கருப்பரும் போலீசாரால் அடுத்தடுத்து சுட்டுக்கொல்லப்பட்டது அந்த இன மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

போலீசாரின் அராஜகத்தை கண்டித்து டெக்சாஸ் மாகாணத்தில் டெல்லாஸ் நகரில் கடந்த சில தினங்களுக்கு முன் கருப்பு இனத்தவர் கண்டன பேரணி நடத்தினர். அப்போது வெள்ளை இன போலீஸ் அதிகாரிகள் 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அங்கு போலீஸ் குவிக்கப்பட்டிருந்தாலும், பதற்றம் தொடர்கிறது. அங்கு போலீஸ் அதிகாரிகளுக்கு மிரட்டல்கள் வந்துள்ளன.

 

இதன் காரணமாக அங்குள்ள போலீஸ் அலுவலகம் மூடப்பட்டது. அந்த நகரம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு, ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

இதற்கிடையே 2 கருப்பு இனத்தவர் படுகொலையை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் பரவி வருகிறது. பரவலாக அமைதி வழியில் போராட்டங்கள் நடைபெற்றாலும், ஒரு சில இடங்களில் வன்செயல்கள் நடைபெற்றன.

 

மின்னசோட்டாவில் செயிண்ட் பால் நகரில் நேற்று முன்தினம் இரவு நடந்த போராட்டத்தின்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே பெரும் மோதல் ஏற்பட்டது. அங்குள்ள நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு போராட்டக்காரர்கள் இடையூறு செய்தனர். போலீசாருடன் மோதினர். அவர்கள் மீது கற்கள், பாட்டில்களை வீசினர். வாணவேடிக்கை பட்டாசுகளை கொளுத்திப் போட்டனர். இதில் பலர் கைது செய்யப்பட்டனர்.

 

நியூயார்க் நகரில் மேன்ஹட்டனில் கண்டன பேரணி நடந்தது. அதில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். வன்முறையில் ஈடுபட்ட 20 பேர் கைது செய்யப்பட்டனர்.

 

இண்டியானா போலீஸ் மாகாணத்தில் நாஷ்வில்லே, வாஷிங்டன் நகரங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றன.

 

இப்படி போராட்டங்கள் பரவி வருவது ஒபாமா நிர்வாகத்துக்கு பெருத்த தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply