ஜெர்மனியில் ஏற்பட்ட கலவரத்தில் கார்கள்-கடைகளுக்கு தீவைப்பு: 120 போலீஸ் அதிகாரிகள் காயம்
ஜெர்மனியில் கடந்த மாதம் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் மற்றும் கட்டிடங்கள் அப்புறப்படுத்தப்பட்டன. அதற்கு கண்டனம் தெரிவித்தும் போலீசுக்கு எதிராகவும் தலைநகர் பெர்லனில் இடதுசாரி அமைப்புகள் நேற்று பேரணி மற்றும் போராட்டம் நடந்தன. இந்த போராட்டம் நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று காலை வரை நடந்தது. அதில் 3500 பேர் கலந்து கொண்டனர்.போராட்டத்தின்போது திடீரென வன்முறை வெடித்தது. இதில் பங்கேற்றவர்கள் பாட்டில்கள், கற்கள் மற்றும் தீப்பந்தங்களை வீசினார்கள். போலீஸ் அதிகாரிகள் மீதும் தாக்குதல் நடத்தினார்கள். எனவே அவர்களை போலீசார் அடக்கியதால் கலவரம் மூண்டது.
அப்போது அப்பகுதியில் ரோட்டில் நின்று கொண்டிருந்த கார்கள் மற்றும் அங்கிருந்த கடைகள் தீவைத்து எரிக்கப்பட்டன. இதனால் நிலைமை மிகவும் மோசம் அடைந்தது. எனவே கலவரத்தை அடக்க அங்கு 1800 போலீஸ் அதிகாரிகள் கூடுதலாக வரவழைக்கப்பட்டனர். 120 போலீஸ் அதிகாரிகள் காயம் அடைந்தனர். கலவரக்காரர்கள் தரப்பில் காயம் அடைந்தவர்கள் விவரம் தெரியவில்லை.
இதற்கிடையே கலவரத்தில் ஈடுபட்ட 86 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பலரை தேடி வருவதாகவும், தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply