கேப்பாப்புலவு மக்கள் உண்ணாவிரத போராட்டத்திற்கு தயார்

unnavirathamமூன்று மாதங்களில் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்படாததை அடுத்து மீண்டும் உண்ணாவிரத போராட்டத்தில் குதிக்க முல்லைத்தீவு – கேப்பாப்புலவு மாதிரி கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.இந்த விடயம் தொடர்பாக திங்கட்கிழமை மாலை 3 மணிக்கு கேப்பாப்புலவு மாதிரி கிராமத்தில் நடைபெற்ற கலந்துரையாடலிலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் 19 ஆம் திகதி கேப்பாப்புலவு பிள்ளையார் கோயிலுக்கு முன்னால் காலை 9 மணிக்கு உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக கேப்பாப்புலவு மக்கள் தெரிவித்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply