இந்தியாவுக்கு பாகிஸ்தான் கண்டனம்
ஹிஸ்புல் பயங்கரவாதி புர்கான் வானி கொல்லப்பட்டதற்கு பாகிஸ்தான் அரசு அதிர்ச்சியும் கடும் கண்டனமும் தெரிவித்துள்ளது.இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், காஷ்மீரில் உரிமை கேட்டு போராடுபவர்களுக்கு எதிராக இந்தியா அளவுக்கு அதிகமான படைபலத்தை பயன்படுத்துவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
மனித உரிமைகள் குறித்த ஐக்கிய நாடுகள் சபை தீர்மானத்தை இந்தியா பின்பற்ற வேண்டும் என்றும் ஷெரீஃப் அறிவுறுத்தியுள்ளார். ஹிஸ்புல் இயக்க தளபதி புர்கான் வானி கொல்லப்பட்ட சம்பவத்தில் பாகிஸ்தான் அரசு அமைதி காப்பதாக அந்நாட்டு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் ஷெரீஃப்பின் இக்கருத்து வெளியாகியுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply