சுவாதி கொலை வழக்கு: புழல் சிறையில் அடையாள அணிவகுப்பு
சுவாதி கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளி என்று கருதப்படும் ராம்குமாரை அடையாளம் காட்ட, புழல் சிறையில் இன்று அடையாள அணிவகுப்பு தொடங்கியது.சென்னை பெருநகர 9வது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சங்கர் முன்னிலையில் இந்த அடையாள அணிவகுப்பு நடத்தப்படுகிறது.
ஜூன் 24ம் தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென்பொறியாளர் சுவாதி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், நெல்லையைச் சேர்ந்த ராம்குமாரை ஜூலை 1ம் தேதி காவல்துறையினர் கைது செய்தனர்.
புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராம்குமரை, குற்றவாளி என நிரூபிக்க, சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அடையாளம் காட்டுவதற்கான அடையாள அணிவகுப்பு இன்று நடத்தப்படுகிறது.
சுவாதியின் தந்தை சந்தான கோபால கிருஷ்ணனும், அடையாள அணிவகுப்புக்கு வரவழைக்கப்பட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply