தென்சீனக் கடலில் சீனாவுக்கு வரலாற்றுபூர்வ உரிமை ஏதுமில்லை சர்வதேச நடுவர் தீர்ப்பாயம் அறிவிப்பு

chinaதென்சீனக் கடல் பகுதி தங்கள் நாடுக்கு மட்டுமே சொந்தமானது என்று ரவுடித்தனம் செய்துவரும் சீனா தென்சீனக் கடல் பகுதியில் இதர நாடுகளின் ஆளுமையை தடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த கடற்பிராந்தியத்தில் சீனா மேற்கொள்ளும் செயற்பாடுகள், சர்வதேச சட்டத்துக்கு முரணானது என்று பிலிப்பைன்ஸ் தெரிவித்திருந்தது.தென்கிழக்கு ஆசிய கண்டத்தில் தென்சீனக் கடல் பகுதியை ஒட்டியுள்ள பிராந்தியத்தில் உள்ள தீவுகள் உள்ளிட்ட 90 சதவீதமான பகுதிகளுக்கு சீனா உரிமை கோரும் அதேவேளையில், இந்த பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளும் அதே அளவு உரிமையை கோரி வருகின்றன.

இதுதொடர்பாக, நெதர்லாந்து நாட்டின் தி ஹாக் நகரில் உள்ள சர்வதேச நடுவர் தீர்ப்பாயத்தில் பிலிப்பைன்ஸ் அரசு வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்துள்ள சர்வதேச நடுவர் தீர்ப்பாயம், தென்சீனக் கடல் பகுதியில் உரிமை கொண்டாடுவதற்கு சீனாவிடம் வரலாற்றுபூர்வ ஆதாரம் ஏதுமில்லை என அறிவித்துள்ளது.

சீனாவின் ஆதிக்கத்துக்கு கடும் பின்னடைவாக கருதப்படும் இந்த தீர்ப்பை பிலிப்பைன்ஸ் வரவேற்றுள்ளது. தென்சீனக் கடல் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை சீனா உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டும் எனவும் பிலிப்பைன்ஸ் அரசு தெரிவித்துள்ளது.

இந்த தீர்ப்பை ஏற்றுக்கொள்ளவோ, அங்கீகரிக்கவோ முடியாது என சீன அரசுக்கு சொந்தமான க்சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனால், இந்த தீர்ப்பின் விளைவாக தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பதற்றம் அதிகரிக்கக்கூடும் எனவும் கருதப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply