நல்லாட்சி அரசின் அரசியல் நாடகமே நாமல் ராஜபக்ஷவின் கைது

namal70 மில்லியன் ரூபாவை முறையற்ற வகையில் பரிமாற்றம் செய்து கொண்டார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் மஹிந்த ராஜபக்ஷவின் மகன் நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டு, வெலிக்கடை மகசீன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள நாமல் ராஜபக்ஷ, நிதி மோசடியின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை வெளியுலகுக்கு வியப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியிருந்தாலும், இது நன்கு திட்டமிட்ட கைது என்பது பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ செய்து கொண்ட உடன்படிக்கையின் ஒருவடிவமாக இந்த கைது அமைந்துள்ளது.

நாமல் ராஜபக்ஷக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டுள்ளன. அதில் பல கொலை குற்றங்கள் அடங்கும். குறிப்பாக பிரபல ரகர் வீரர் வசீம் தாஜுடீன் கொலையுடன் நாமல் ராஜபக்ஷ நேரடி தொடர்பினை கொண்டிருந்தார் என குற்றம் சாட்டப்பட்டது.

இதற்கான ஆதாரங்கள் உள்ள போதும் விரைவில் கைது செய்யப்படுவார் என அறிவிக்கப்பட்டது. இன்று கைது செய்யப்படுவார், நாளை கைது செய்யப்படுவார், விரைவில் கைது செய்யப்படுவார் என பல்வேறு ஊகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தன. எனினும் நிதி மோசடி குற்றச்சாட்டில் நாமல் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலைக்குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டால் மரண தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது என்பதை அறிந்த மஹிந்த தரப்பு, நல்லாட்சி அரசாங்கத்துடன் சில இணக்கப்பாடுகளை மேற்கொண்டுள்ளது.

அதாவது இலகுவில் வெளி வரக்கூடிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்து பின்னர் விரைவாக பிணையில் விடுதலை செய்வது என்பதே அதன் உடன்படிக்கையாகும். பாரதூரமான வழக்குகளில் கைது செய்வதை தடுக்கும் நோக்கில் இவ்வாறான இணக்கப்பாட்டுக்கு மஹிந்த உட்பட்டிருந்தார்.

சில மாதங்களுக்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகன் யோசித ராஜபக்ஷ கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்திய வேளை, மஹிந்த பெரும் அதிர்ச்சி அடைந்ததுடன் கண்ணீருடன் ஊடகங்களில் முன்னிலையில் காட்சியளித்தார்.

ஆனால் நாமலின் கைதினை அடுத்து மஹிந்த எந்தவிதமான கவலையையும் வெளிப்படுத்தவில்லை. நாமலின் கைது ஏற்கனவே திட்டமிட்ட ஒன்று என்பதால் அவ்வாறான தாக்குத்திற்கு மஹிந்த முகங்கொடுக்கவில்லை.

பெரும்பாலும் எதிர்வரும் 18ம் திகதி நீதிமன்றில் நாமல் ஆஜர்படுத்தப்படும் போது பிணையில் விடுதலை செய்வதற்கான வாய்ப்புகளே அதிகமாவுள்ளது.

பாரிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள மற்றுமொருவராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ உள்ளனர். அவரையும் விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply