கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதி

kamalநடிகர் கமல்ஹாசன், தனது அலுவலகத்தின் மாடிப்படியிலிருந்து தவறி விழுந்து காயமடைந்துள்ளார்.சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அலுவலகத்தில், நள்ளிரவில் கமல்ஹாசன் தவறி விழுந்ததையடுத்து, உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு முதுகு தண்டுவடப் பகுதியிலும் காலிலும் காயம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக கமல்ஹாசனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பதாகவும், அவர் குணமடைய சில வாரங்கள் ஆகும் என்றும் மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘சபாஷ் நாயுடு’ திரைப்படத்தில் நடித்துவரும் கமல்ஹாசன், கடந்தவாரம்தான் அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply