உள்நாட்டின் அனைத்து தீவிரவாத அமைப்புகள் மீதும் நடவடிக்கை எடுங்கள்: பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வலியுறுத்தல்

USA இந்தியாவில் நடைபெற்று வரும் பல்வேறு தீவிரவாத தாக்குதல்கள் பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்படுவதாக இந்தியா தரப்பில் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. அமெரிக்காவும் பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் தீவிரவாத குழுக்கள் குறித்து தனது கண்டனத்தை அவ்வவ்போது தெரிவித்து வருகிறது.  இந்நிலையில், உள்நாட்டில் உள்ள அனைத்து தீவிரவாத அமைப்புகள் மீது நடவடிக்கை எடுத்து பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் என்று பாகிஸ்தானுக்கு, அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

 

இது குறித்து அமெரிக்காவின் துணை செய்தி தொடர்பாளர் மார்க் டோனர் கூறியதாவது:-

 

பாகிஸ்தான் கண்டிப்பாக அனைத்து தீவிரவாத குழுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். அண்டை நாடுகள் மீது தாக்குதல் நடத்தும் தீவிரவாத குழுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

பாகிஸ்தானை சேர்ந்த எந்த தீவிரவாத குழுக்களாவது ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல் நடத்துகிறா என்பது குறித்து ஆராய அந்நாட்டு  ராணுவ தளபதி ஜெனரல் ரஹீல் ஷெரீப் உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது.

 

தீவிரவாத அச்சுறுத்தலால் பாகிஸ்தான் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதை நாங்கள் தொடர்ந்து கவலை தெரிவித்து வருகிறோம்.

 

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply