வெளிநாட்டு நீதிபதிகள் விடயத்தை இலங்கை அரசே தீர்மானிக்க வேண்டும் : அமெரிக்கா

USAபோர்க்குற்றங்கள் தொடர்பான சிறப்பு நீதிமன்றத்தின் கட்டமைப்பு மற்றும் வெளிநாட்டு நீதிபதிகள் உள்ளடக்கத்தை தீர்மானிப்பது, இலங்ப்கை அரசே தீர்மானிக்க வேண்டும் என, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மனித உரிமைகள் உதவிச் செயலர் ரொம் மாலினோவ்ஸ்கி தெரிவித்துள்ளார்.அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச்செயலர் நிஷா பிஸ்வாலுடன் இணைந்து இலங்கைக்கு மேற்கொண்ட பயணத்தின் முடிவில் நேற்றிரவு கொழும்பில் இந்த செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

நீதிமன்றங்களில் அனைத்துலக பங்களிப்பு குறிப்பிடத்தக்க ஒரு விடயமாக இருக்கவில்லை.

ஏனைய நாடுகளுக்கு இலங்கை தனது நீதித்துறை நிபுணத்துவப் பங்களிப்பை வழங்கியிருக்கிறது. ஒருவேளை இலங்கையும் அதிலிருந்து பயன்பெறலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply