துருக்கியில் இராணுவம் – போலீசார் இடையே கடும் துப்பாக்கிச் சூடு: 17 போலீசார் உயிரிழப்பு
துருக்கி நாட்டில் மக்களால் தேந்தெடுக்கப்பட்ட ஆட்சி நடக்கிறது. பிரதமராக பினாலி எல்ட்ரீம் உள்ளார். இந்நிலையில், அரசை கைப்பற்றியுள்ளதாக அந்நாட்டு இராணுவத்தினர் நேற்று இரவு அறிவித்தனர்.நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விமான நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய இடங்கள் முடக்கப்பட்டுள்ளன.அங்காரா நகரில் உள்ள விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய இடங்களில் இராணுவத்தினர் குவிந்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, அங்காரா நகரில் இராணுவத்திற்கும் அரசு தரப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்று வருகிறது. துருக்கி பாராளுமன்றம் மீது இராணுவத்தினர் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல்கள் நடத்தினர்.
இஸ்தான்புல் நகரில் உள்ள தஸ்கின் சதுக்கம் அருகே போலீசார் மற்றும் இராணுவத்தினர் இடையே கடும் துப்பாக்கிச் சூடு நடைபெறுகிறது. பெரிய அளவிலான வெடிசத்தம் கேட்பதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் பொதுமக்கள் இருவர் உயிரிழந்தனர்.
அங்காராவில் உள்ள செயலாக்க துறையினர் மீது இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 17 போலீசார் உயிரிழந்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply