நீஸ் தாக்குதல், துருக்கி ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியை தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றிய கூட்டம்
துருக்கியில் தோல்வியடைந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி, பிரான்சின் நீஸ் நகரத் தீவிரவாதத் தாக்குதல் ஆகியவற்றின் பிந்தைய நிலைமைகளை கலந்தாய்வு செய்ய ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர்கள் விரைவில் பிரஸல்ஸில் கூட்டம் நடத்தவுள்ளனர்.அமெரிக்க வெளியுறவு செயலர் ஜான் கெர்ரியும் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள இருக்கிறார்.
துருக்கியில் ஜனநாயகம் மீட்கப்பட வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு கொள்கைத் தலைவர் பெடரீகா மோகெரீனி அழைப்பு விடுத்துள்ளார்.ஆனால், இந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி சட்டப்படியான ஆட்சியை புறக்கணிப்பதற்கான உரிமத்தை அதிபர் ரசீப் தையிப் எர்துவானுக்கு வழங்கவில்லை என்று ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் எச்சரித்திருக்கின்றன.
நீஸ் தாக்குதலில் கொல்லப்பட்டோருக்கு இந்த வெளியுறவு அமைச்சர்கள் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்துவார்கள்.தீவிரமயமாதலுக்கு எதிராக உள்நாட்டில் ஒத்துழைப்பது, மத்திய கிழக்கு நாடுகளில் இஸ்லாமிய அரசு குழுவுக்கு எதிராக ஒத்துழைப்பது ஆகியவை பற்றி அவர்கள் கலந்தாய்வு மேற்கொள்வர்.ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரிட்டன் வெளியேற வேண்டும் என்று பரப்புரை மேற்கொண்ட பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் போரிஸ் ஜான்சன் இந்த கூட்டத்தில் முதல்முறையாக பங்கு கொள்ள இருக்கிறார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply