பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நவாஸ் ஷெரீப் கட்சி ஆட்சியை பிடித்தது
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் சட்டசபைக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் 26 அரசியல் கட்சிகள் சார்பில் 423 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ஓட்டுப்பதிவு முடிந்ததை தொடர்ந்து ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று நேற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்த தேர்தலில் அங்கு ஆட்சி செய்து வந்த பாகிஸ்தான் மக்கள் கட்சி தோல்வி அடைந்தது.பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ் ஷெரீப்) கட்சி மொத்தம் உள்ள 41 இடங்களில் 30 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. மேலும், அந்தக் கட்சிக்கு மூன்றில் இரண்டு பங்கு மெஜாரிட்டி கிடைத்தது.
பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு 2 இடங்கள் மட்டுமே கிடைத்தன. இம்ரான்கான் கட்சிக்கும் 2 இடங்கள்தான் கிடைத்தன. இங்கு சட்டசபை இருந்தாலும், பாராளுமன்ற முறை அரசாங்கம்தான் பதவியில் இருந்து வருகிறது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தனது கட்சி வெற்றி பெற்றிருப்பதற்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply