73 தமிழக மீனவர்கள் விடுதலை
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 73 தமிழக மீனவர்களும் விடுதலை செய்யப்படவுள்ளதாக இலங்கையின் மீன்பிடித்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரத்தின் தலையீட்டை அடுத்து, இவர்களை விடுதலைசெய்வதற்கான உரிய பரிந்துரைகளை அமைச்சு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இவர்கள் எப்போது விடுவிக்கப்படுவார்கள் என்ற விடயம் வெளியாகவில்லை. இவர்கள் அனைவரும் கடல் எல்லையை மீறனர் என்ற குற்றச்சாட்டின்பேரில் ஜூலை மாதம் 6ஆம் திகதி 21ஆம் திகதி வரைக்குள் கைதுசெய்யப்பட்டனர்.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply