காபூல் வெடிகுண்டு தாக்குதலுக்கு சோனியா காந்தி கண்டனம்: பலி எண்ணிக்கை 80 ஆக உயர்வு

Sonia ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அமைதியாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலுக்கு காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-  அமைப்பு ரீதியான, முட்டாள் தனமாக தாக்குதல்கள் உலகின் பல்வேறு நகரங்களில் அரங்கேறி வந்து கொண்டிருக்கிறது. பிரிவினை வாதம், மற்றும் பயங்கர வாததிற்கு எதிரான போராட்டத்தில் இணைந்து செயல்படுவதே இதற்கு தீர்வு.

 

ஆப்கானிஸ்தான் மக்களுக்கும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் என ஆழ்ந்த இரங்கல். 

 

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

இதேபோல், துணைத் தலவர் ராகுல்காந்தியும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

முன்னதாக, ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள தெஹ மஸங் சதுக்கத்தில் சிறுபான்மை ஹசாரா சமூகத்தினரின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. இந்த வெடிகுண்டு தாக்குதலில், சம்பவ இடத்திலேயே பலர் உயிரிழந்தனர்.

 

தற்கொலைப்படை தீவிரவாதி நடத்திய இந்த தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது. 200 பேர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply