ராஜபக்சேவை மீண்டும் அதிபராக்க ஊடகங்கள் முயற்சிக்கிறது: பிரதமர் ரணில் விக்ரமசிங்கே குற்றச்சாட்டு

RANILஇலங்கையில் ராஜபக்சே தலைமையிலான எதிர் கட்சியின் கண்டி மாவட்டத்தில் அடுத்த வாரம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக அந்நாட்டு அச்சு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன. இந்நிலையில், மஹிந்தா ராஜபக்சேவை மீண்டும் இலங்கை அதிபராக்க அந்நாட்டு ஊடகங்கள் முயற்சிப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கே குற்றம்சாட்டியுள்ளார். கண்டி மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினரான விக்ரமசிங்கே செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 

 

அரசாங்கத்தை விமர்சிப்பதை பொறுத்தவரை ஊடகங்கள் மீது எந்த பிரச்சனையும் இல்லை. அதனை அவர்கள் விருப்பம் போல் செய்யட்டும். ஆனால் மீண்டும் முரடர்களை ஆட்சியில் கொண்டு வர முயசிக்க வேண்டாம்.

 

இந்த அரசாங்கத்தை கவிழ்த்து, ராஜபக்சேவின் ஆட்சியை கொண்டு வர முயற்சித்தால், அதற்கும் நாங்கள் தயாராகவே உள்ளோம்”

 

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

இலங்கையில் 2005-ம் ஆண்டு முதல் 2015 வரை மஹிந்தா ராஜபக்சே அதிபராக ஆட்சியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply