ஆப்கானிஸ்தானில் ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு
சனிக்கிழமை அன்று தலைநகர் காபூலில் நடைபெற்ற 80 பேருக்கு மேலானோர் கொல்லப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலை தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் ஒரு நாள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இந்த தாக்குதலில் 200 பேருக்கு மேலானோர் காயம் அடைந்தனர். பெரும்பாலும் ஷியா முஸ்லீம்கள் அடங்கிய ஹாஸாரா சிறுபான்மை சமூக உறுப்பினர்கள் நடத்திய ஆர்பாட்டத்தை இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கடும்போக்கான சுன்னி முஸ்லீம்களை உள்ளடக்கிய இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் குழு, இந்த தாக்குதலின் பின்னால் இருந்ததாக தெரிவித்திருக்கிறது.
இந்த இறப்புகளுக்கு பழிவாங்கப்படும் என்று ஆப்கன் அதிபர் அஷ்ராப் கானி தெரிவித்திருக்கிறார்.ஆப்கானிஸ்தானிலுள்ள ஐநா பணிக்குழு இதனை போர் குற்றம் என்று விவரித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply