நவாஸ் ஷெரீப்பின் காஷ்மீர் பற்றிய கனவு ஒரு ராஜ சிந்தனை: பாகிஸ்தான் பத்திரிக்கை கருத்து

SARIFகாஷ்மீர் குறித்த தொடர்ச்சியான பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சொல்லாட்சியால், பாகிஸ்தானுக்கும், காஷ்மீர் மக்களுக்கு அதிக அளவில் தொந்தரவு வந்து கொண்டிருப்பதாக அந்நாட்டு தினசரி நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது. பிரதமரின் கருத்து நாட்டின் அதிகாரப்பூர்வமான கருத்துடன் ஒத்துப் போகவில்லை. விருப்பமுள்ள ராஜ சிந்தனைக்கு பதிலாக, பிராந்திய எல்லை பிரச்சனைகளை அமைதியான மனதுடன் பிரதமர் தீர்க்க வேண்டும். 

இந்த மனநிலையால் பலர் தொடர்ந்து பாதிக்கப்படுவார்கள். பாகிஸ்தானை பொறுத்த வரை காஷ்மீர் மக்களின் சுதந்திர போராட்டத்திற்கு தனது தார்மீக ஆதரவு அனைத்தையும் கைவிட்டுள்ளது. அதற்கு பதிலாக காஷ்மீர் மக்களின் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டத்திற்கு தொடர்ந்து குரல் கொடுக்கும்.

 

இந்திய அதிகாரிகளை பிரதமர் நவாஸ் ஷெரீப் விமர்சிப்பது பாகிஸ்தானுக்கு மட்டுமல்லாது, காஷ்மீர் மக்களுக்கும் தொடர்ந்து தொந்தரவை அளிக்கும்.

 

பிரதமரின் இதுபோன்ற இருதரப்பு பேச்சுகள் தொடர்ந்து இருநாடுகளிடையே பதற்றத்தை தக்க வைக்கும்.

 

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply