ஒபாமாவை துருக்கியில் வைத்து கொலை செய்யத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் சிரியாவைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.
கடந்த வாரம் துருக்கியில் வைத்து இவர் கைதானார். நேட்டோ மாநாட்டில் பங்கு கொள்ள ஜேர்மன், பிரான்ஸுக்குச் சென்ற பராக் ஒபாமா துருக்கிக்கும் வரவுள்ளார் எனத் தகவல் கிடைத்ததும் இந்த நபர் பராக் ஒபாமாவைத் துருக்கியில் வைத்துக் கொலை செய்யத் திட்டம் தீட்டியதாகச் சந்தேகிக்கப்படுகின்றது.

இந்தச் சதி பற்றிய செய்தியை முதன் முறையாக சவூதி அரேபியாவின் அல் – வற்றான் என்ற பத்திரிகையே வெளியிட்டது. பின்னர் இது பற்றிய விபரங்களையும் சந்தேக நபர் கைதான செய்தியையும் வெளியிட்டது. சிரியாவைச் சேர்ந்த நபருடன் மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் துருக்கியில் வாழும் அமெரிக் காவின் உயர் அதிகாரிகளின் குடும்பத்தைச் சேர்ந்த வர்களாவர். இது பற்றி அமெரிக்காவின் பாதுகாப்பு அதிகாரிகள் கூறியதாவது:-

அமெரிக்க ஜனாதிபதிகள் கொலை செய்யப்படுவதற்கு இலக்கு வைக்கப்படுவது வழமையாகிவிட்டது. இதே போல் பராக் ஒபாமாவும் இலக்கு வைக்கப்பட்டுள்ளார். ஆனால் கைதான சந்தேக நபர் பராக் ஒபாமா பங்கு பற்றிய வேறு வைபவங்களில் கலந்து கொண்டமைக்கான அல்லது நெருங்கி நின்றமைக்கான ஆதாரங்களோ, ஒபாமாவின் ஐரோப்பிய நாடுகளுக்கான பயணத்தை இவர் பின் தொடர்ந்தார் என்பதற்கான ஆதாரங்கள் எவையும் இல்லையெனவும் தெரிவிக்கப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply