பாதுகாப்பு வலயத்தினுள் மறைந்திருந்து புலிகள் படையினர் மீது தாக்குதல் நடாத்தியுள்ளனர்
சர்வதேச யுத்த ஒழுங்கு விதிகளை மீறி அப்பாவி பொது மக்கள் தங்கி இருக்கும் பாதுகாப்பு வலயத்தினுள் மறைந்திருந்தபடி புலிகள் படையினர் மீது தாக்குதல்களை நடாத்துவதாகப் பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்கா நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது குற்றஞ்சாட்டினார்.புலிப் பயங்கரவாதத்தை முழுமையாக ஒழித்து சவப்பெட்டிக்குள் அடக்கம் செய்யும் இறுதித் தருணம் நெருங்கிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். இறுதிக்கட்டத்தை அடைந்திருக்கும் புலிப்பயங்கரவாதம் நாட்டில் மிக மோசமான அழிவுகளை ஏற்படுத்த முயற்சிக்கலாம். அதனால்முன்னெச்சரிக்கையோடு பொதுமக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
புலிப் பயங்கரவாதம் காரணமாக மூன்று தசாப்தங்கள் பின்னடைந்த இந்நாட்டை இரண்டு மூன்று மடங்காக துரித மாக அபிவிருத்தி செய்வதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பது தொடர்பான பிரேரணை மீதான விவாதத்தைத் தொடக்கி வைத்து உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்ட வாறு கூறினார்.
பிரதமர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
எம்மை அண்மித்து கொண்டிருக்கும் சிங்கள, தமிழ் புதுவருடத்தின் போது நாம் சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடியும்.புலிப் பயங்கரவாதம் முழுமையாக ஒழித்துக் கட்டப்படுவதே எமது பொது இலக்கு. இதுவே நாட்டு மக்களினதும் எதிர்பார்ப்பாகும்.
அதனால் சகலரும் இந்த நோக்கத்திற்கு ஆதரவுநல்க வேண்டும். யாதுமறியாத அப் பாவிக் குழந்தைகளின் கழுத்தில் சயனைட் வில்லைகளை அணிவிக்கும் புலிகள் இயக்கத் தலைவர் மனித வர்க்கத்தையே சம்ஹாரம் செய்பவராவார்.
பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பை தேடி வரும் குழந்தைகளையும், பெண்களையும் மட்டுமல்லாமல் அப்பாவி விவசாயிகளையும் கூட புலிகள் படுகொலை செய்து வருகின்றனர். விளையாட்டு வீரர்கள் மீதும் இவர்கள் தாக்குதல் நடாத்துகின்றனர். மத வைபவங்களிலும் படுகொலைகளை மேற் கொள்கின்றனர். படுகொலைகளும், மனித சம் ஹாரமுமே புலிப் பயங்கரவாரத்தின் மொழி.எமது படைவீரர்களின் வெற்றிகரமான நடவடிக்கைகளின் பயனாக புலிகள் இயக்கத்தினர் முழுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளனர், பல மிழந்துள்ளனர். அவர்களின் பல தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். இவ்வாறான நிலை யில் அப்பாவி மக்களுக்கென அரசாங்கம் அறி வித்த பாதுகாப்பு வலயத்தினுள் பிரவேசித்து படையினர் மீது தாக்குதல்களை நடாத்துகின்றனர்.
அவர்களைப் போன்று எமது படைவீரர்கள் ஒரு போதும் செயற்படுபவர்களல்லர். மனித நேயமும், நல்லொழுக்கமும் கொண்டவர்களே எமது படைவீரர்கள். அதன்படி தமது மனிதா பிமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.புலிகள் இயக்கத்தினர் தமது பயங்கரவாத நடவடிக்கைகளை விடவும் பொய் பிரசார நடவடிக்கைகளின் முன்னணியில் திகழுகின்ற னர். இங்கு இனப்படுகொலை ஒரு போதுமே இடம்பெறவில்லை. ஐ.நா.வின் பாதுகாப்பு சபையில் இலங்கை விவகாரம் எடுக்கப்படுவதற்கு ஆட்சேபனை தெரிவித்த எமது நீண்டகால நண்பர்களான ரஷ்யாவுக்கும் சீனாவுக்கும் இச்சபையில் நன்றி தெரிவிக்கிறேன்.
அப்பாவி மக்களுக்கு உணவு எடுத்துச் சென்ற கப்பல்கள் மீதும் அவர்களின் பிடியிலிருந்து தப்பிவரும் தமிழ் மக்கள் மீதும் தாக்குதல் நடாத்தும் புலிகள் தமிழ் மக்களுக்கு என்ன உரிமையைப் பெற்றுக்கொடுக்கப்போகிறார்கள் இது குறித்து ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும்.நாம் சர்வதேச நாணய நிதியத்திடம் நிதியுதவி பெற நடவடிக்கை எடுத்துவருகின்றோம். இச்சமயம் சில அமைப்புக்களும், புலிகளின் ஆதர வாளர்களும் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். எமது மனிதாபிமான நடவடிக்கையை இடைநிறுத்தவே இவர்கள் இந்த முயற்சியில் ஈடுபடுகின்றனர். இருப்பினும் மனிதாபிமான நடவடிக்கை ஒருபோதும் இடைநிறுத்தப்படாது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply