மோதல் பகுதியில் சிக்கியுள்ள மக்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் : வோல்டர் கேலன்
இலங்கையின் வடக்கே மோதல் இடம்பெறும் ஒரு குறுகிய பகுதியில் சிக்கியுள்ள பொதுமக்களைப் பாதுகாப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. “வன்னியில் பாதுகாப்பு வலயமென இலங்கை அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ள 14 சதுர கிலோமீற்றர் பரப்புக்குள் சிக்கியுள்ள 100,000 பொதுமக்கள் குறித்து நான் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளேன்” என இலங்கைக்கு நான்கு நாள் விஜயம் மேற்கொண்டிருந்த ஐ.நாவின் இடம்பெயர்ந்தோர் மனித உரிமைகள் தொடர்பான பிரதிநிதி வோல்டர் கேலன் தெரிவித்துள்ளார்.
அங்கேயுள்ள மக்களுக்கு உடனடி நிவாரணமும் , மனிதாபிமான உதவிகளும் அவசியமாகத் தேவைப்படுகின்றது. எனவே மனிதாபிமான உதவியாளர்களின் சேவை அவசியமாக இருப்பதுடன் அம்மக்களை அங்கிருந்து உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்வும் வேண்டும்” எனவும் வோல்டர் கேலன் தமது இலங்கை விஜயத்தின் போது கூறியதாக ஐ.நா. செய்திப்பிரிவு தெரிவித்துள்ளது. பாதுகாப்பு வலயத்தினுள் பொதுமக்கள் இருக்கும் வரை அப்பகுதியைத் தொடர்ந்தும் ‘ பாதுகாப்பு வலயமாக’ பிரகடனப்படுத்த வேண்டுமென அரசாங்கத்தையும், விடுதலை புலிகளையும் தாம் கோருவதாக வோல்டர் கேலன் மேலும் தெரிவித்துள்ளார்
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply