பாதுகாப்பு பிரதேசத்தில் பாரிய வெடி குண்டோசைகள்
பாதுகாப்புப் பிரதேசத்தை நான்கு முனைகளில் சுற்றிவளைத்தும் புதுமாத்தளன் மற்றும் அம்பலவன் பொக்கணை போன்ற பகுதிகளை மிக நெருக்கியுமுள்ள படையினர் புலிகளை சரணடையுமாறும் மக்களை சுதந்திரமாக வெலியேற அனுமதிக்குமாறும் ஒலிபெருக்கிகள் மூலம் கடந்த சில நாட்களாக தொடர்ந்து அறிவித்து வருகின்றனர். இன்று (ஏப். 08) பிற்பகல் இறுதியாக விடப்பட்ட அவ்வாறான அறிவிப்புக்கு பின் பாதுகாப்பு பிரதேசத்தில் பாரிய குண்டு வெடியோசைகள் கேட்டதாக பாதுகாப்பு தரப்பு செய்தி வெளியிட்டுள்ளது.
வன்னியில் யுத்தத்தில் சிக்கியுள்ள பொது மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு படையினரால் முல்லைத்தீவு பிரதேசத்தில் புதுமாத்தளனில் இருந்து முள்ளிவாய்க்கால் வரையிலான 12 கி.மீ நீளமான கடலோர நிலப்பரப்பு பாதுகாப்புப் பிரதேசமாக அறிவிக்கப்பட்டது. தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த புதுக்குடியிருப்புக்கு கிழக்காக இருந்த ஒரு சிறிய துண்டு நிலத்தையும் படையினரிடம் இழந்துவிட்டு, மக்களின் `பாதுகாப்பு பிரதேசத்தை` தமது கடைசி ஒளிவிடமாக்கியுள்ள புலிகள் அங்குள்ள மக்களை தமக்கு மனித கேடயமாக்கியுள்ளனர்.
புலிகளின் தலைமைகளினால் கடந்த வாரம் தேவையற்று பலியிடப்பட்ட மூத்த உறுப்பினர்களின் விசுவாசிகளான கீழ் மட்டப் போராளிகள் தமது கோபத்தை தலைமைகளுகெதிராக திரும்பித் காட்டத் தொடங்கும் காலம் நிதர்சனமாகி வருகின்ற சூழலில் பாதுகாப்புப் பிரதேசத்தில் புலிகளுக்கிடையில் மோதல்கள் தோன்றிவிட்டதன் அறிகுறியாக இன்று கேட்ட பாரிய வெடி குண்டு ஓசைகள் இருக்கக் கூடுமென அவதானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : TELOnewsBoth comments and pings are currently closed.