அமெரிக்காவில் இஸ்லாமிய மதபோதகரை சுட்டுக் கொன்றவர் சிக்கினார்

arest அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள குயின்ஸ் பகுதியில் அல் பர்கான் ஜமே என்னும் மசூதி உள்ளது. இந்த மசூதியில் வங்காளதேசத்தைச் சேர்ந்த இஸ்லாமிய மத போதகர் மவுலாமா அகோன்ஜி(வயது 55) மற்றும் அவருடைய நண்பர் தாரா உதீன்(64) ஆகிய இருவரும் தொழுகை நடத்திவிட்டு வெளியே வந்தபோது மர்ம நபர் ஒருவரால் கடந்த சனிக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனர்.

 

இந்த கொலைக்கான காரணம் குறித்து நியூயார்க் நகர போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அகோன்ஜியையும், தாரா உதீனையும் சுட்டுக் கொன்றவரை தீவிரமாக தேடியும் வந்தனர்.

 

இந்த நிலையில், இந்த இரட்டைக் கொலையில் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் ஒருவர் நியூயார்க் போலீசாரிடம் நேற்று சிக்கினார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். எனினும் பிடிபட்ட அவர்தான் குற்றவாளி என்று போலீசார் இன்னும் வெளிப்படையாக கூறவில்லை.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply