நெப்டியூனுக்கு அப்பால் மர்ம விண்பொருள் கண்டுபிடிப்பு
சூரியனை பின்புறமாக வலம்வரும் 200 கிலோமீற்றர் விட்டம் கொண்ட மர்மமான விண்பொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருப்பது வானியலாளர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. பான் ஸ்டார்ஸ் தொலைநோக்கி கொண்டு, நெப்டியூனை கடந்து சூரிய மண்டலத்திற்கு அப்பால் அவதானிக்கப்பட்டிருக்கும் இந்த மர்மப்பொருள் கிரகங்கள் வலம்வரும் திசைக்கு எதிர்த் திசையில் நகர்கிறது.
இந்த விண்பொருளுக்கு பிகு என பெயரிடப்பட்டுள்ளது. சீன மொழியில் இதற்கு கலகக்காரர் என்று அர்த்தமாகும்.
குவின்ஸ் பல்கலைக்கழக வானியலாளர்களே இந்த விண் பொருளை அவதானித்துள்ளனர். கிரக அமைப்பு அதனை சூழவிருக்கும் தூசு மற்றும் வாயுக்களை கட்டுப்படுத்துகிறது. இதனால் அனைத்தும் ஒரே திசையிலேயே வலம்வரும்.
“இந்த கண்டுபிடிப்பு சூரிய மண்டலத்திற்கு அப்பால் எமக்கு முழுமையாக தெரியாத பல விடயங்கள் இருப்பதையே காட்டுகிறது” என்று மேற்படி ஆய்வுக் குழுவைச் சேர்ந்த மத்தியூ ஹோல்மன் குறிப்பிட்டுள்ளார்.
சூரிய மண்டலத்தின் ஒன்பதாவது கிரகம் ஒன்று குறித்து வானியலாளர்கள் அவதானம் செலுத்தி வரும் நிலையிலேயே இந்த மர்ம விண்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனினும் இது பற்றி மேலும் ஆய்வுகள் நடத்த வேண்டி இருப்பதாக மேற்படி ஆய்வுக் குழுவினர் குறிப்பிட்டுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply