தீவிரவாதத்தை ஒழிக்க அமெரிக்காவில் குடியேறியவர்கள் குறித்து தீவிர ஆய்வு செய்வேன்: டிரம்ப்

dramஅமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. குடியரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட உள்ள அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் பல்வேறு இடங்களுக்கு சென்று பிரச்சாரம் மேற்கொண்டு, சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசி வருகிறார்.இந்நிலையில், சிகாகோவிற்கு கிழக்கே உள்ள ஓகியோ மாகாணத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் பேசியவை பின்வருமாறு:-

அமெரிக்காவில் குடியேறியவர்கள் குறித்து தீவிர ஆய்வு செய்வேன். அமெரிக்காவின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சில நாடுகளில் இருந்து குடியேறுவதற்கு இடைநிறுத்தம் செய்வேன்.

ஐ.எஸ் தீவிரவாதிகளை நசுக்கி, அழித்து ஒழிப்பேன். முன்னாள் அதிபர் கிளிண்டனும், அதிபர் பராக் ஒபாமாவும் ஐ.எஸ் தீவிரவாதிகள் வளர்வதற்கு அனுமதித்து விட்டார்கள்.

ஜிகாதிஸ்டுகளின் நெட்வொர்க்கை வேரோடு பிடுங்கி எறிய மற்றும் அமெரிக்க இளைஞர்கள் அதனால் பாதிக்காமல் இருக்க தீவிர இஸ்லாமியம் குறித்து ஆணையம் அமைக்கப்படும் என்று உறுதி அளிக்கிறேன்.

தீவிரவாதத்திற்கு எதிராக போராட புதிய அணுகுமுறை தேவைப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply