சவுதி அரேபியா மீது ஏமனில் உள்ள ஹவுத்தி போராளிகள் ராக்கெட் தாக்குதல்: 7 பேர் பலி

saudi armyஏமனில் இயங்கிவரும் ஹவுத்தி இனப் போராளிகள் எல்லைதாண்டி சவுதி அரேபியா மீது நடத்திய ராக்கெட் தாக்குதலில் சவுதியை சேர்ந்த அப்பாவி பொதுமக்களில் ஏழுபேர் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.ஏமன் நாட்டின் அதிபர் அப்ட்-ரப்பு மன்சூர் ஹாடி பதவிவிலக வேண்டும் என அவரது ஆட்சிக்கு எதிரான ஹவுத்தி போராளிகள் ஆயுதப்புரட்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டக்காரர்களுக்கு தேவையான ஆயுதங்களையும், நிதியுதவியையும் அண்டைநாடான ஈரான் வழங்கிவருவதாக கூறப்படும் நிலையில் ஏமன் அரசுக்கு சவுதி அரேபியா மறைமுகமாக ஆதரவு அளித்து வருகிறது.

இந்நிலையில், சவுதி அரேபியா – ஏமன் நாடுகளுக்கிடையிலான நஜ்ரான் தொழிற்பேட்டையை குறிவைத்து ஹவுத்தி போராளிகள் நேற்று நடத்திய ராக்கெட் தாக்குதலில் அப்பாவி பொதுமக்களில் ஏழுபேர் உயிரிழந்ததாக சவுதி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply