பற்றி எரியும் வீட்டில் உயிரைக் கொடுத்து குழந்தையை காப்பாற்றிய வளர்ப்பு நாய்

usaஅமெரிக்காவின் மேரிலேண்ட் மாநிலம் பால்டிமோர் நகரில் வசித்து வருபவர் எரிக்கா போரிம்ஸ்கி. சம்பவத்தன்று இவர் தனது வீட்டில் இருந்து கார் ஷெட்டுக்கு சென்றுவிட்டு சிறிது நேரத்தில் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது வீடு தீப்பிடித்து எரிந்தது. இதைக் கண்டு பதறினார். உள்ளே செல்ல முடியாத அளவுக்கு வீட்டை தீ சூழ்ந்திருந்தது. அவரது 8 மாத பெண் குழந்தை விவினியாவும், வளர்ப்பு நாய் போலோவும் வீட்டின் இரண்டாவது மாடியில் உள்ள படுக்கை அறையில் சிக்கியிருந்தனர். குழந்தையை மீட்பதற்காக மீண்டும் மீண்டும் வீட்டிற்குள் செல்ல முயன்றதால் போரிம்ஸ்கியின் முகத்திலும் கையிலும் தீக்காயம் ஏற்பட்டது.

தீ விபத்து பற்றி தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கடுமையாகப் போராடி தீயை அணைத்து குழந்தையை மீட்பதற்காக உள்ளே சென்றனர். அப்போது அவர்கள் கண்ட காட்சி நெஞ்சை உருக்குவதாக இருந்தது. நன்றியுள்ள ஜீவனான வளர்ப்பு நாய், குழந்தையின் மீது தன் உடலை போர்த்தியபடி இறந்துகிடந்தது. அதன் உடல் முழுவதும் தீக்காயங்கள் இருந்தன. குழந்தை தீக்காயங்களுடன் மயங்கி கிடந்தது. உடனே குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

தீப்பிடித்ததும் குழந்தைக்கு பாதுகாப்பு கேடயமாக இருந்து தன் உயிரை இழந்துவிட்ட நாயின் விசுவாசத்தை நினைத்து போரிம்ஸ்கி கண்ணீர் விட்டார். தனது முதல் மகனை (வளர்ப்பு நாய்) இழந்துவிட்டதாக கூறிய அவர், பெண் குழந்தை உயிர்பிழைக்க கடவுளிடம் பிரார்த்தனை செய்வதாக தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply