முயல் என நினைத்து சிறுமியை சுட்டுக் கொன்ற வேட்டைக்காரர்கள்
சீனாவின் அன்ஹுயி மாகாணம் லுயான் பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி, செடி கொடிகள் மற்றும் புற்கள நிறைந்த பண்ணை நிலத்தில் விளையாடிக்கொண்டிருந்தாள். அப்போது அவ்வழியே டிரக்கில் வந்த மூன்று வேட்டைக்காரர்கள், அந்த சிறுமியை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.பின்னர் அருகில் சென்று பார்த்தபோது சிறுமி என்று தெரிந்ததும் அந்த இடத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டனர். உயிருக்குப் போராடிய சிறுமியை அவளது பெற்றோர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி இறந்து விட்டாள்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், 3 வேட்டைக்காரர்களும் சரண் அடைந்தனர். முயல் என நினைத்து தவறுதலாக சிறுமியை சுட்டதாக அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். அவர்கள் மீதான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply