தங்கத்திற்காக சிந்து போராடியபோது, அவர் ஜாதியை கூகுளில் தேடிய இந்திய ரசிகர்கள்!
ஒலிம்பிக் பேட்மின்டன் மகளிர் ஒற்றையர் இறுதி போட்டியில் பி.வி.சிந்து, உயிரை கொடுத்து ஆடிக்கொண்டிருந்த நேரத்தில், அவர் எந்த ஜாதிக்காரர் என இந்திய ரசிகர்கள் கூகுளில் தேடோ தேடு என தேடியுள்ளது அம்பலமாகியுள்ளது. ஒருவர் புகழ் பெறும்போது அவர் என்ன ஜாதி என்று அறிந்து கொள்ளும் மனநிலை இந்தியர்களுக்கு இயல்பாகவே வந்துவிடுகிறது.
ஜூன் மாதம் மற்றும் ஜூலை மாதத்தில் சுமார் இரண்டரை லட்சம் முறை சிந்து ஜாதியை கூகுளில் சர்ச் செய்துள்ளதாக புள்ளி விவரம் கூறுகிறது. இந்த ஆகஸ்ட் மாதத்திலோ, கடந்த மாதத்தைவிட 10 மடங்கு அதிகமானோர் ஜாதியை தேடியுள்ளனராம். அப்படியானால் எத்தனை லட்சம் என்று நீங்களே புரிந்து கொள்ளலாம். குறிப்பாக, ஒலிம்பிக் அரையிறுதி மற்றும் நேற்று நடந்த பைனல் போட்டிகளின்போது, இந்த தேடுதல் அதிகமாக இருந்துள்ளது. குறிப்பாக, ஆந்திரா-தெலுங்கானாவில்தான் தேடுதல் உச்சத்தில் இருந்துள்ளது.
ஒருசிலர் பயிற்சியாளர் கோபி சந்த் ஜாதியையும் சேர்த்து தேடியுள்ளது கூகுள் டிரெண்ட் மூலம் அம்பலமாகியுள்ளது. இந்தியர்களின், ஜாதிய பார்வை என்பதை தாண்டி இதில் வேறு ஒரு காரணமும் உள்ளது. சிந்து, தெலுங்கானாவுக்கு சொந்தமா, ஆந்திராவுக்கு சொந்தமா என குடுமிபிடி சண்டை போட்டுக்கொண்டுள்ளனர் இரு சகோதர மாநில மக்களும். அவரது ஜாதியை கண்டுபிடித்துவிட்டால், மாநில அடையாளத்தை கண்டுபிடித்துவிடலாம் என்பதும் இந்த தேடுதலுக்கு காரணமாக இருக்கலாம் என்கிறார்கள்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply