இஸ்லாமின் சகிப்பு தன்மையை பாதுகாக்க மக்களுக்கு மொரோக்கோ அரசர் வேண்டுகோள்
வெளிநாடுகளில் வாழ்கின்ற மொரோக்கோ நாட்டவர்கள் கடும்போக்குவாதத்தை நிராகரித்து, இஸ்லாமின் சகிப்பு தன்மை மிக்க வடிவத்தை பாதுகாக்க வேண்டும் என்று மொரோக்கோ அரசர் ஆறாம் முகமது அழைப்பு விடுத்துள்ளார்.மொரோக்கோ நாட்டை சேர்ந்த பெரும்பாலோர் ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர்.
அண்மையில் முஸ்லிம் கடும்போக்குவாதிகளால் ஐரோப்பாவில் நடைபெற்ற தாக்குதல்களை அடுத்து, இடம்பெயர்ந்து வாழ்கின்ற ஐம்பது லட்சம் மொரோக்கோ நாட்டவரிடம் முதல் முறையாக அரசர் முகமது இந்த அழைப்பை விடுத்திருக்கிறார். மொரோக்கொ வம்சாவளியை சேர்ந்த ஐரோப்பிய குடிமக்கள், சில தாக்குதல்களில் சிக்கியுள்ளனர்.
பாமர மக்களின் கொலைகளை கண்டித்திருக்கும் அவர், கடந்த மாதம் பிரான்ஸில் பாதிரியார் கொல்லப்பட்டது மன்னிக்க முடியாதது என்று குறிப்பிட்டுள்ளார்.
இஸ்லாம் பற்றிய தவறான செய்திகளை பரப்புவதற்கும், அமைதிக்கான மதிப்பீடுகளை திரித்து கூறவும் கடும்போக்காளர்கள் இளைஞர்களை சுரண்டி வருவதாக அரசர் முகமது கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply