ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிர்காலம் குறித்த ஆலோசனை கூட்டம்
ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிர்காலம் குறித்து ஆலோசிக்க, இத்தாலி, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் தலைவர்கள் இன்று சந்தித்துப் பேசுகின்றனர்.ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேற பிரிட்டன் தயாராகிக் கொண்டிருப்பதால், தங்களின் நிலையை ஒருங்கிணைக்கும் முயற்சியாக மாட்டியோ ரென்சி, மற்றும் பிரான்ஸ்வா ஒல்லாந்த் ஆகிய தலைவர்கள் இடையே நடக்கவுள்ள பேச்சுவார்த்தை அமையவுள்ளது.
பொருளாதாரம், பாதுகாப்பு கொள்கை, குடியேறிகள் தொடர்பான நெருக்கடி, சிரியாவில் நடைபெறும் மோதல்கள் மற்றும் ரஷ்யா , துருக்கி ஆகிய நாடுகளுக்கு இடையேயான உறவு ஆகியவை குறித்து இத்தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply