சோனியா மீது தாக்குதல் நடத்த புலிகள் திட்டம் : இந்திய புலனாய்வுத்துறை
காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா மற்றும் அவரது இரு புதல்வர்கள், புதல்வி மீது தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தும் சாத்தியம் காணப்படுவதாக இந்திய புலனாய்வுத் துறையினர் எச்சரித்துள்ளனர். இதனையடுத்து அவர்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையகம் இவ்வாறான தாக்குதல்களை நடத்துவதற்கு உத்தரவிட்டுள்ளதா என்பது தொடர்பாக எதனையும் குறிப்பிட முடியாதுள்ளதாகவும் இந்தியப் புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு ஏதும் நிகழ்ந்தால் இந்தியா பாரிய இழப்புகளைச் சந்திக்க நேரிடுமென அண்மையில் மறுமலர்ச்சித் திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வை. கோபாலசாமி (வைகோ) தமிழ்நாட்டில் இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றியமையையடுத்தே புலனாய்வுத்துறையினர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply